துதிப் பாடல்கள்

இயேசுவின் ஊழியம் அன்பரின்

Yesuvin Oozhiyam Anbarin

இயேசுவின் ஊழியம் அன்பரின் ஊழியம்

ஸ்தோத்திரம் செலுத்துவேன்

அன்பர் இயேசுவின் மகத்துவ செயல்களை

வந்து பாருங்கள் - (2)

வாருங்கள் வாருங்கள் புவியின் மாந்தரே

திரளாய் கூடுங்கள்

உங்களின் கண்ணீரை இயேசு இரட்சகர்

மகிழ்ச்சியாய் மாற்றுவார் - (2)

பாவ சேற்றினில் மூழ்கி தவித்து

அனுதினம் அழுதீரோ

கலங்கவேவேண்டாம் - சிலுவை

இரட்சகர் இயேசு மன்னிப்பாரே - (2)

வியாதி துன்பம் அகோர காயங்கள்

கலங்க வைத்ததோ

பரம வைத்தியர் இயேசு இன்றே

உன்னை குணமாக்குகிறார் - (2)

அநீதிகொடுமை கடனின் பாரங்கள்

அனுதினம் அழுத்தினதோ

வருத்தம் வேண்டாம் உந்தன் பாரத்தை

இயேசு நீக்குகிறார்

மூப்பு தனிமை வேலையின்றி

தவித்து நின்றீரோ

அன்பின் கிருபை வள்ளல் இயேசு

இன்றே சந்திப்பாரே- (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு