இயேசுவினாலே எல்லாம் கூடுமே
இயேசுவினாலே எல்லாம் கூடுமே
கூடாதது எதுவுமே இல்லை (2)
1. சுவையில்லாத தண்ணீரையே
சுவையான ரசமாய் மாற்றினாரே (2)
உதவாக்கரையாய் இருக்கும் உன்னை (2)
உபயோகமாக மாற்றுவாரே! (2) -இயேசுவினாலே எல்லாம் கூடுமே
2. நான்கு நாட்களாய் நாறிப்போன
லாசருவை உயிரோடெழுப்பினாரே (2)
நாற்றமெடுக்கும் உன் வாழ்க்கையிலே (2)
நறுமணம் வீசச் செய்திடுவார் (2) -இயேசுவினாலே எல்லாம் கூடுமே
3. வாழ்க்கையை இழந்த தாவீதுக்கு
எல்லாவற்றையும் திரும்பத் தந்தார் (2)
நிர்க்கதியாக நிற்கும் உன்னை (2)
நிச்சயமாகவே உயர்த்திடுவார் - இயேசுவினாலே எல்லாம் கூடுமே