துதிப் பாடல்கள்

இயேசுவுக்காக வாழ நண்பனே நீ

Yesuvukkaaga Vaazha Nanbanae Nee

இயேசுவுக்காக வாழ நண்பனே நீ வருவாயா?

அமைதி இல்லாமலே மனதுயர வேதனையில்

கலங்கும் மக்கள் ஆயிரமாயிரம்

அமைதியின் மன்னன் இயேசு தானே - இந்த

இயேசுவை கூற வருவாயா?

வியாதி படுக்கையில் ஆறுதல் இல்லாமலே

வாடும் மக்கள் ஆயிரமாயிரம்

வியாதியை சுமந்தவர் இயேசு தானே - இந்த

இயேசுவை கூற வருவாயா?

பாவத்தின் அடிமையில் விடுதலை இல்லாமலே

தவிக்கும் மக்கள் ஆயிரமாயிரம்

விடுதலை நாயகன் இயேசு தானே - இந்த

இயேசுவை கூற வருவாயா?

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு