கிறிஸ்தவ பாடல்

உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை மீதினிலே

Uthiththaare Nalla Meyppar Pullanai Meethinile

உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை மீதினிலே

விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த

இம்மானுவேலன் இவர் தானே

விண்ணிலே தேவனுக்கே மகிமை

பூமியிலே நல் சமாதானம்

மானிடர் மேல் பிரியமும்

இன்றும் என்றும் உண்டாவதாக

மந்தையை காத்த மேய்ப்பர்களும்

சிந்தையில் சிறந்த ஞானியரும்

பாலனை சென்று பணிந்தனரே

நல் காணிக்கை அவருக்குப் படைத்தனரே

உன்னையும் என்னையும் மீட்டிடவே

பூமியில் வந்த அதிசயமே

எண்ணில் அடங்கா நன்றியுடன்

அவரைப் போற்றி துதித்திடுவோம் — உதித்தாரே

அன்பே அவரின் திருமொழியாய்

பண்பில் சிறந்த போதகராய்

நம்மை அணைத்துக் காத்திடவே

ஏழையின் கோலம் எடுத்தாரே

விண்ணவர் வாழ்த்தொலி கேட்கிறதே

எண்ணில்லா ஆனந்தம் பெருகிடுதே

வல்லவர் இயேசு பிறந்த நாளில்

வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்திடுவோம் — உதித்தாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு