கிறிஸ்தவ பாடல்

யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்

yesuvukku Namathu Thesaththais Sonthamaakkap

யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்

பாசமாய் முயல்வோமே தாசரே

தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு

வாசம் வைத்தன்பின் சுவிசேஷத்தை ஏந்தி

கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை

எங்குமே யேசுராசா ஆளவே – அவர்

சிங்காரக்கொடி மேலிலங்கக் குடிளெல்லாம்

மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன்

வித்தை பூர்வீக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு

மெத்த்ப் பேர்போன இந்திய தேசமாம் – இதில்

சத்தியமாக வந்த நித்யா யேசுவின் பரி

சுத்த பரம ஞானம் ஜோதியாய்த் தோன்ற

தீய மாமூல் வழக்கம் ஓய வீண்பக்தி நீங்க

மாயக் கோட்பாடு முற்றும் மாறவே – யேசு

தூயன் சத்தியவேத ஞாயவிதிகள் உள்ளம்

பாயநம் நாட்டார் குணமாகவே வல்ல

நம்மை வெறுத்து யேசுநாதனுக் கொப்புவித்துச்

செம்மையுடன் உழைத்துச் சேவிப்போம் – அவர்க்

குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும் படைத்து

நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு