1
முன்னறிந்தீரே யெகோவா
மன்னன் இயேசு கிறிஸ்துவினுள்ளென்னை,
பூமியின் உருவம் புதுப்பிக்கப்படுமுன்னே,
ஆகாய விரிவை நீர் அமைத்திடுமுன்னே,
குன்றுகள் மலைகள் தோன்றிடு முன்னே,
இன்றுள்ள லாவைகளெல்லாம் உருவாகுமுன்னே.
2
முன் குறித்தீரே யெகோவா
மன்னன் இயேசு கிறிஸ்துவினுள்ளென்னை,
சத்யேக தேவா நீர் சிந்திக்குமுன்னே,
மரியின் குமாரன் வெளிப்படுமுன்னே,
பாவ நிவர்த்தியைச் செய்திடு முன்னே,
தேவ குமாரன் சாயல் தோன்றிடுமுன்னே.
3
பேரிடு அழைத்தீரே யெகோவா
சீரான இயேசு கிறிஸ்துவினுள்ளென்னை,
ஆதாலமக் கரங்களால் அமைத்திடுமுன்னே,
அன்பன் ஏனோக்கை மேலெடுத்திடுமுன்னே,
நோவாவுடன் நீர் உறவாடுமுன்னே,
ஆவலாய் ஆபிராமை அழைத்திடுமுன்னே.
4
நீதிமானாக்கினீரே யேகோவா
ஜோதி இயேசு கிறிஸ்துவினுள் என்னை,
தாயின் வயிற்றில் நான் உருவாகுமுன்னே,
பூவில் கால நிறைவு புலப்படுமுன்னே,
ஆவியின் இருள் அகற்றப்படுமுன்னே,
பாவி நான் தேவனின்றி இருக்கையிலே.