கர்த்தர் உன்னதரே
மகிமையில் சிறந்தவரே
மகிமையின் தேவன் செயல்களை நினைத்து
எதனை செலுத்திடுவாய்?
1
ஆத்துமாவை காத்தனரே
அற்புதம் செய்தனரே
மறவாது என்றென்றுமாய்
அன்பு கூர்ந்திடுவாய். - கர்த்தர்
2
மகிமை உன்னில் வெளிப்படவே
தம்மையே தந்தனரே
அனுதினமும் அவர் நாமத்தை
சேவித்து வழி நடப்பாய். - கர்த்தர்
3
உனதனுக்காய் தேவ கர்ம்
யாவையும் முடித்ததுவே
அவரது செய்கை அனைத்தையுமே
பூவினில் சாற்றிடுவாய். - கர்த்தர்
4
நீதியின் நல் வாசல்களை
திறந்துமே நடத்தினாரே
துதிகளுடன் அவர் நாமத்தை
என்றுமே தொழுதிடுவாய். - கர்த்தர்