அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 4

இஸ்ரவேலின் சேனைகளின்

1

இஸ்ரவேலின் சேனைகளின்

முன் நடந்த தெய்வமே

எங்கள் சேனாபதியாக

எங்கள் முன்னே செல்லுமே.

2

உம்மை நம்பி உம்மை சார்ந்து

உம்மை மகிமை படுத்தவே

அடியார் தொடுக்கும் வேலையை நீர்

ஆசீர்வதிக்க வேணுமே.

3

ஸ்நானகன் யோவானோடேசு

ஸ்நானம் வாங்கும் வேளையில்

வந்தமர்ந்த வான்புறாவே

வாரும் இந்த நேரத்தில்.

4

அன்று நூற்றிருபது பேர்

சென்ற தோர் மேல் வீட்டினில்

வந்தமர்ந்த அக்கினியே

வாரும் இந்த நேரத்தில்.

5

சமுத்திரத்தை ரண்டாகப்

பிளந்த எங்கள் தெய்வமே

உலர்ந்த கரையை எங்களுக்காய்

ஒழுங்கு செய்ய வேணுமே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு