இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே.
1
தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே. - இதோ
2
தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே. - இதோ
3
மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே. - இதோ
4
சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீமிகுந்து திடும்சுவிசேஷத்தனை
கறி உயர்த்திடுவோம் உன்னையே. - இதோ
5
முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம். - இதோ