அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 464

தாசரே, இத்தரணியை

தாசரே, இத்தரணியை அன்பாய்

ஏசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் யேசுவைக் கறுவோம், அவரைக்

காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்.

வெளிச்சம் வீசுவோம்.-

தாசரே

1

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்தோரை,

வருந்தியன்பாய் அழைத்திடுவோம்,

உரித்தாய் ஏசு பாவப் பாரத்தை,

நமது துக்கத்தை, நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே.- தாசரே

2

பசியற்றோர்க்குப் பிணியாளிகட்குப்

பட்சமாக உதவி செய்வோம் ;

உசித நன்மைகள் நிறைந்து, தமை மறந்து,

யேசு கனிந்து தீர்த்தனரே.-

தாசரே

3

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை,

நீசரை நாம் உயர்த்திடுவோம் ;

பொறுக்கவொன்னா கஷ்டத்துக்குள்

நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே.- தாசரே

4

இந்துதேச மாது சிரோமணிகள்

விந்தை செயல்கிகுள் வரவழைப்போம் ;

சந்தர குணங்களைந்து, அறிவிலுயர்ந்து,

நிற்பந்தங்கள் தீர்ந்து, சிறந்திலங்கிட.-

தாசரே

5

மார்க்கம் தப்பி நடப்போரை சத்ய

வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்;

உக்கமாக ஜெபித்திடுவோம், நாமுயன்றிடுவோம்

நாம் உழைத்திடுவோம், நாம்ஜெயித்திடுவோம்.- தாசரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு