கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணிக்- கர்த்தரின்
1
ஆபேலின் ரத்தம் அல்ல, - நீ செய்த
அநியாயத்தைச் சொல்ல
சாபம் எல்லாம் வெல்ல, - சிந்துண்ட
தயையை நான் என்ன சொல்ல?
கோபம் இல்லாமல் உன் மா பாவம் தீர்த்திடக்
கூறிப் பிதாவின் முன் ஏறின ரத்தமே.- கர்த்தரின்
2
ஜீவ அப்பம் அல்லவா? - கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லவா?
பாவ மனங்கள் கல்லோ? - உனக்காய்ப்
பகிரப்பட்ட தல்லோ?
தேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திடு- கர்த்தரின்
3
தேவ அன்பைப் பாரு - கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு ;
பாவக் கேட்கை கூறு ; - ராப்போஜன
பந்தியில் சேரு ;
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அந்நியன் ஆகாதே.- கர்த்தரின்
4
அன்பின் விருந்தாமே ; - கர்த்தருடன்
ஐக்கியப் பந்தியாமே ;
துன்பம் துயர் போமே ; - இருதயம்
சுத்த திடனாமே ;
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப் போதே வா.- கர்த்தரின்