அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 487

ஆசீர்வதியும் கர்த்தரே

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தமிகவே

நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே

வீசீரோ வானஜோதி கதிர்க்கே

மேசியா எம்மணவாளனே

ஆசாரியரும் வான் ராஜனும்

ஆசீர்வதித்திடும்.

1

இம்மண மக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்

உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்

இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே

இன்பத்தோடா டன்பாக்கி கூட் சமே

உம்மிலே தங்கித் தரிக்கவே

உக்கமருளுமே.-

வீசீரோ

2

ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே

பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே

வெற்றி பெற்றோர்க்கும் இவர் நெஞ்சத்திலே

வீற்றாளும் நீர் ஏகராஜனாய்

உற்றவான் ராயர் சேயர்க்கே

ஒப்பாய் ஒழுகவே.-

வீசீரோ

3

பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே

ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்

மா திரளாக இவர் சந்ததியார்

வந்துதித்தும்மை பிரஸ்தாபிக்க

ஆ தேவ கிருபை தீர்மானம்

ஆம் போல் அருளுமேன்.-

வீசீரோ

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு