ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 320

சப்தமாய் பாடி

பல்லவி

சப்தமாய் பாடி சத்துருவை சங்கிலியால் கட்டுவோம்

நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் பாடி உயர்த்திடுவோம்

இராஜா இயேசு ஜீவிக்கின்றார்

இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்

சரணம் 1

புதுப்பாடல் பாடி மகிழ்வோம் புனிதர்கள் சபையிலே

துதிபலி எழும்பட்டும் ஜெயக்கொடி பறக்கட்டும்

எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது

சரணம் 2

உண்டாக்கினாரே நம்மை உள்ளம் மகிழட்டும்

ஆளுநர் அவர்தானே இதயம் துள்ளட்டும் - நம்

சரணம் 3

தமது ஜனத்தின்மேலே பிரியம் வைக்கின்றார்

வெற்றி தருகிறார் மேன்மைப்படுத்துவார் - இன்று

சரணம் 4

கர்த்தரை உயர்த்தும் பாடல் வாயில் இருக்கட்டும்

வசனம் என்ற போர் வாள் கையிலே இருக்கட்டும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு