ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 321

நிர்மூலமாகாதிருப்பது

பல்லவி

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை

முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் - நான்

கிருபை கிருபை மாறாத கிருபை

சரணம் 1

கிருபையினாலே இரட்சித்தீரே

நீதிமானாக மாற்றினீரே

உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட

உன்னதங்களிலே அமரச் செய்தீர்

சரணம் 2

கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சீயாக

சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே

பரிசுத்த இரத்தத்தால் மீட்ப்பளித்தீரே

பாவம் அனைத்தையும் மன்னீத்தீரே

சரணம் 3

தேவனின் பலத்த சத்துவத்தாலே

நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்

கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை

அறிவிக்கின்றேன் நான் கிருபையினால்

சரணம் 4

ஜீவனைப் பார்க்கிலும் மேலானது

உன்தன் கிருபை மேலானது

அழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்

ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன்

சரணம் 5

காலைதோறும் புதியது

உந்தன் கிருபை புதியது

காத்திருப்பேன் உன் பாதத்தில்

களிகூர்வேன் உம் கிருபையில்

சரணம் 6

இயேசுவை அறிகிற அறிவினாலே

அமைதியும் கிருபையும் பெருகிடுதே

நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும்

நாளும் பொழுதும் சூழ்ந்துகொள்ளும்

சரணம் 7

தாயின் வயிற்றில் இருந்தபோதே

பிரித்தெடுத்தீரே அழைத்தீரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு